மூன்று மில்லியன் குடும்பங்களின் மாணவர்களுடய கல்விக்கொடுப்பனவை CAF அதிகரித்துள்ளதாக பிரதமர் அறிவித்தார்

பிரான்ஸ் அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக CAF இனால் பெற்றோர்களுக்கு வழங்கப்படும்  ARS எனப்படும் ľ allocation de rentrée scolaire எனப்படும் கொடுப்பனவானது. இவ்வருடம் மேலும் 100 யூரோக்கள் வரை அதிகாரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த புதனன்று பிரதமர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்ததோடு எதிர் வரும் வாரத்தில் இத் தொகை எவ்வளவு என வரையறுக்கப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டார். 

பிரான்சில் வாழும் மக்களில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் ஆண்டு தோறும் இதனால் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்படி 6 முதல் 10 வயது வரையான பிள்ளைகளுக்கு  368.84 யூரோக்களும் 11 முதல் 14 வயது வரையான பிள்ளைகளுக்கு 389.19 யூரோக்களும் 15 முதல் 18 வயது வரையான பிள்ளைகளுக்கு  402.67 யூரோக்களும் கடந்த கல்வியாண்டின் போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
 
மேலும் இத் தொகை அதிகரிக்கப்படும் போது
 6 முதல் 10 வயது வரையான பிள்ளைகளுக்கு  468.84 யூரோக்களும் 11 முதல் 14 வயது வரையான பிள்ளைகளுக்கு 489.19 யூரோக்களும் 15 முதல் 18 வயது வரையான பிள்ளைகளுக்கு  502.67 யூரோக்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆண்டு தோறும்  ஓகஸ்ட் மாத இறுதியில் இப் பணம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது  .
கோவிட் 19 காரணமாக அரசாங்கம் நாட்டு மக்களின் பொருளாதார நெருக்கடியினைக் குறைப்பதற்காக மேற்கொண்ட மற்றுமொரு நடவடிகையாக இக் கல்விக் கொடுப்பனவு அதிகரிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் தன் உரையில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது   . 

 

Comments

Popular posts from this blog

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுடன் இணைந்ததே பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்