சைவப் புலவர் சுந்தரமூர்த்தி துஸ்யந் அவர்களின் உலக நாடுகளில் தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் எனும் இணைய வழி கருத்தரங்கு
இன்றைய நிலையில் உலகம் எதிர் கொண்டுள்ள கோவிட் 19 காரணமாக இலத்திரனியல் ஊடக பயன்பாடு பாரிய அளவில் அதிகரித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் "உலக நாடுகளில் தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் " என்ற இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றினை தமிழ்நாட்டு ஜி.டி.என் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறையும் கனடா வாழ் தமிழர் சங்கமும் இணைந்து நடாத்தும் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கானது 20.07.2020 திங்கட் கிழமை முதல் 26.07.2020 ஞாயிற்றுக் கிழமை வரை 16.00 மணி முதல் 17.00 மணி வரை சூம் (ZOOM ) இணைய வழி ஊடாக நடைபெறவுள்ளது.
இக் கருத்தரங்கில் பங்கு பெறுபவர்கள் தமிழ் மொழி தொடர்பான பல ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
பல நூல்கள், கருத்தரங்குகள், ஆய்வுக் கட்டுரைகள் , மேடைப் பேச்சுக்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இந்தியா, இலங்கை, மலேசியா என பல நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்கள் இவ் இணைய வழி கருத்தரங்கில் பங்கு பெறுவது சிறப்பம்சமாகும்.
எமது பிரான்ஸ் தேசத்தில் வாழும் புலம்பெயர் தமிழ் அறிஞரானா சைவப்புலவர் திரு . சு. துஸ்யந் அவர்கள் நாட்டில் (இலங்கை) இருந்த காலத்திலேயே சைவமும் தமிழும் தொடர்பாகவும் பல ஆய்வுகளையும் நூல்களையும் எழுதியிருந்தார் . இலங்கை இந்து கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டு வந்த இந்து கலைக் களஞ்சியத்திலும் பல நூறு கட்டுரைகளை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுகலைமானி பட்டதாரியான இவர் சிறு வயது முதலே கல்விப்புலத்தில் பல தேடல்களைக் கொண்ட இவர் சிறந்ததொரு மேடைப் பேச்சாளர் என்பதோடு இலங்கையில் இருந்த போது மிக நீண்ட காலமாக உயர் தர, பல்கலைக் கழக மாணவர்களுக்கு இந்து நாகரிகம் , இந்து சமயம், அளவையியல் போன்ற பாடங்களை போதித்த கிழக்கிலங்கை புகழ் மிக்க ஆசானாகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
Comments
Post a Comment