ஜூலை 14 - எரிந்த பஸ் மற்றும் கார்,61கைதுகள்
இவ் வருடம் நாட்டில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு பிரான்சின் பல பகுதிகளிலும் பட்டாசு வாண வேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் பரிசிலும் சில புறநகர் பகுதிகளிலும் பல தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
பிரான்சைப் பொறுத்தவரை இது ஒரு சோகமான பாரம்பரியமாக மாறியுள்ளது. குறிப்பிட்ட இன் நாட்களில் ஒவ்வொரு வருடமும் தீ விபத்துக்கள் அதிகம் பதிவு செய்யப்படுகிறது .
அதேபோல் நேற்று இரவும் தீவிபத்தின் போது 61 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவர்களில் 53 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது நாந்தேரில் உடற்பயிற்சி கூடம் மற்றும் RATP பஸ் உட்பட ஒரு மோட்டார் கார் என்பன எரிந்துள்ளது. எரியும் காரை அணைப்பதற்கு சென்ற வேளை ஒருவர் காயமடைந்துள்ளார்.
மேலும் பட்டாசு காரணமாக பரிஸ் 13 இல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஏற்பட்ட போதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
Comments
Post a Comment