உலகம் முழுவதும் 55 வீதமான விமான சேவைகள் பாதிப்பு நிலமை சீராக நான்கு வருடங்கள் ஆகலாம் - சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்

உலகம் முழுவதும் இந்த ஆண்டு 55% விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டுதான் சர்வதேச விமானப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பும் எனச் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் கணித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இயல்புநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கு முற்றிலும் முடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகப் பல நாடுகளும் தங்களது நாட்டின் சர்வதேச விமானச் சேவைகளை முடக்கியுள்ளன. தற்போதைய சூழலில், சில நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், விமானப் போக்குவரத்து குறைந்த பயணிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உலக அளவில் விமானப் போக்குவரத்தானது 2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனச் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கணிப்பின்படி கொரோனா ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவீதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் எனவும், இந்த நிலை சீரடைய 2024ஆம் ஆண்டுவரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பதில் உலக நாடுகள் (சிறப்புக்கட்டுரை தமிழ்மொழி பெயர்ப்பு )