#பிள்ளைகள்_விரும்பும்_பிரான்சின்_கல்வி_முறைமை
பகுதி1உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தம் நாட்டின் எதிர்கால நற்பிரஜை உருவாக்கும் முயற்சியில் கல்வி முறைமையில் விசேட கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில் மிகச்சிறந்த கல்வித்திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தும் நாடு என்ற பெருமையைப் பிரான்ஸ் அரசு பெற்றுக் கொள்கின்றது. இங்கு கற்றல் என்பது பிள்ளைகளுக்கு விருப்பமான ஒன்றாகவே கொண்டு செல்லப்படுகின்றது. பாடசாலைக் கல்விக்கு முன்பாக வேலை செல்லும் பெற்றோர்கள் வேலை நேரத்தின் போது தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசாலும் தனியார் நிறுவனங்களாலும் இயக்கப்படும் கிறெஸ்(creche) எனப்படும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் மிக முக்கியமானவையாகும். இங்கு இரண்டு மாத குழந்தைகள் முதல் மூன்று வயது குழந்தைகள் வரை பராமரிக்கப்படுகின்றனர். குறிப்பாக அரசு நடாத்துகின்ற கிரெஸ்களில் உணவு , பால், டயப்பர் ஆகியன இலவசமாகவே வழங்கப்படுகின்றன. பிரெஞ்சு மொழியல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் இங்கு விடப்படும் போது மழலையிலே அவர்கள் பிரெஞ்சு மொழியை பழக முடிகின்றது .இது அவர்களின் எதிர்கால கல்வியின் ஆரம்பமாகவே கருதப்படுகிறது .(தொடரும்)
Comments
Post a Comment