புதிய கல்வியாண்டில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக பொது சுகாதார கவுண்சில் வெளியிட்டுள்ள அறிக்கை
எதிர் வரும் செப்டம்பர் மாதம் பிரான்சில் ஆரம்பிக்கப்படவுள்ள பள்ளிகள்(école Primarire), கல்லூரிகள்(college), உயர்நிலைப் பள்ளிகள்(Lycée) என்பவற்றில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக பொதுச் சுகாதார உயர் கவுண்சில்(HCSP) பல புதிய கோட்பாடுகளை வெயிட்டுள்ளது.
2020/2021 கல்வியாண்டின் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக HCSP நேற்று(புதன்) பல புதிய சுகாதார கடப்பாடுகளை வெளியிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் நெகிழ்வான விதிகளை ஆதரிக்கின்றது.
மாணவர்களுக்கு இடையேயான தூரம் ஒரு மீற்றர் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி உள்ளது . இருப்பினும் மாணவர்களின் வகுப்பறைகள் முடிந்தவரை முழுமையாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது.
11 வயதில் இருந்து கட்டாயம் முகமூடி அணிய வேண்டும் என்பதை மீண்டும் தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. காரணம் சில சந்தர்ப்பங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமது சமூக இடைவெளியை குறைக்க வேண்டியுள்ளதால் முக மூடி அவசியம் என வலியுறுத்துகின்றது. எனினும் உடல் மற்றும் விளையாட்டு கல்வி(EPS) போன்ற சந்தர்ப்பங்களில் இது தவிர்க்கப்படலாம்.
வரையறுக்கப்பட்ட இடங்களில் அடிக்கடி காற்றோட்டம் செய்யப்பட வேண்டும் . குறிப்பாக மூடிய வகுபறை போன்ற இடங்களில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை காற்றோட்டம் செய்வது அவசியமாகும் . எனினும் அடிக்கடி வகுப்பறை சுத்தம் (தொற்று நீக்கம் ) செய்யப்பட வேண்டியதில்லை.
மேலும் இலையுதிர் காலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆரம்பிக்குமானால் பாடசாலைகளின் தொடர்ச்சி பின்னர் தீர்மானிக்கப்புடும் எனவும் அவ் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .
Comments
Post a Comment