இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் பூட்டப்படுகின்றது

இலங்கையில் கொரோணா பரவல் காரணமாக பொதுத் தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை தொடர்ந்து மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் நிலை திரிசங்கு சொர்கம் போன்று மாறிவிட்டது நேற்று கல்வி அமைச்சர் கருத்து வெளியிடுகிற போது பாடசாலைகள் உடனடியாக ஆரம்பிக்கப் படும் என கூறிய போதிலும் கொரோனா வைரஸிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும் வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை பாடசாலைகளை மூடி வைக்குமாறு கல்வியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல்கள் முடிவடைந்திருக்கும் என்றும், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் சுகாதார அமைச்சு கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பதில் உலக நாடுகள் (சிறப்புக்கட்டுரை தமிழ்மொழி பெயர்ப்பு )