பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் வழங்கிய மற்றுமொரு சலுகை

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாட்டின் பிரதமர் ஜோன் காஸ்டே (Jean castex)எதிர் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள புதிய கல்வியாண்டிலிருந்து பல்கலைக்கழக  மாணவர்கள் கன்ரினுக்காக (canteen ) நாள் ஒன்றுக்கு செலுத்தும் 3.30 யூரோவானது 2.30 யூரோக்கள் குறைக்கப் பட்டு வெறும் 1 யூரோவினை மாத்திரம் செலுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.இது பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இதற்கு காரணம் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கோவிட்19 வைரஸ் காரணமாக இந்த கல்வியாண்டு இறுதியின் போது வழங்கப்பட்ட விடுமுறையில் பகுதி நேர மற்றும் குறுங்கால வேலைகள் எதனையும் அவர்களால் செய்ய முடியாமல் போனமையினால் அவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டே இம் முடிவினை அறிவித்துள்ளார் .

பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தமட்டில் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய கல்விச்செலவில் கணிசமான தொகையினை தாங்கள் கற்கின்ற போதே வேலை செய்து சம்பாதிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Comments

Popular posts from this blog

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுடன் இணைந்ததே பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்