இலங்கையில் தமிழ் இன அழிப்பிற்கு எதிராக பிரான்சில் இளையோர்களால் நடாத்தப்படும் நிழல்படக் கண்காட்சியும் கையெழுத்துப் போராட்டமும்
இலங்கையில் திட்டமிட்ட அடிப்படையில் சிங்கள இனவாதிகளால் காலங்காலமாக தமிழ் இன அழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதை புரிந்தும் சர்வதேசம் வாய் மூடி மௌனிப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. எனினும் இதனை மீண்டும் மீண்டும் உலகிற்கு பறைசாற்றும் எம் முயற்சி என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதன் மற்றுமொரு அங்கமே இன்று தமிழர் இயக்கத்தின் உதவியுடன் பிரான்சின் நெவெர் (Nevers)நகரில் இளையோர்களால் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்து.
"கடந்த 72 வருடங்களுக்கு மேலாக தமிழ் இன அழிப்பு "என்ற தொனிப்பொருளில் 1983 கறுப்பு ஜூலை தமிழ் இன அழிப்பின் அவலங்களை நிழற்படங்களாக்கி நெவெர் நகர இளையோர்கள் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இது இங்கு வாழும் பிரெஞ்சு மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
தென் இலங்கை சிங்கள காடையர்களால் 2000 ற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டது. கொழும்பு வெலிக்கடைச் சிறையிலே தங்கத்துரை, குட்டி மணி உட்பட 53 கைதிகள் அநியாயமாக கொலை செய்யப்பட்டனர். பஸ் தரிப்பிடத்தில் அப்பாவித்தமிழர் நிர்வாணப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிழற்படமொன்றை இன்றும் பார்க்கும் போது எமது இரத்தம் கொதிக்கின்றது. இவை யாவற்றையும் நெவெர் நகர இளையோர் நிழற்படங்களாக்கி காட்சிப்படு த்தியுள்ளனர்.
இந்த அவலங்களை சர்வதேசத்திற்கு உரத்துச் சொல்லவே அவர்கள் கையொப்ப போராட்டம் ஒன்றையும் நடாத்துகின்றனர். நிகழ்வின் இறுதியில் பெறுப்படும் கையொப்பங்களுடன் இந் நிழற்படங்களையும் இணைத்து சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இருந்து இன்று வரை இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருப்பது இனப்படுகொலைதான் என தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று நெவெர் நகர பிதாவிற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட இருப்பதோடு அன் நகர சபைத் தீர்மானத்தை பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்கிரோன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் அவர்கள் முயன்றிருப்பது எம் மனங்களின் மத்தியில் இளையோரின் இச் செயல்கள் உயர்ந்து நிற்கின்றது.
கடந்த திங்கள் (20.07.2020) முதல் எதிர்வரும் சனிக்கிழமை(25.07.2020) வரை இன் நிகழ்வு நடைபெறுகின்றது.
உங்கள் அனைவரின் ஆதரவினையும் அவர்கள் அன்பாக வேண்டி நிற்கின்றார்கள்.
இன் நிழ்விற்கு வட கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அம்பாரை மாவட்ட தலைவி திலகராணி செல்வராசா அவர்கள் ஊக்கம் தந்திருப்பதும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
எனவே இனியும் வாய்மூடி மௌனிப்பதில் பயனில்லை உலகெங்கும் உள்ள எம் இன உறவுகளே இதை உரத்துக் கூறுங்கள் .
https://www.youtube.com/watch?v=pE7Q2B_TE5g&feature=youtu.be&fbclid=IwAR1PNtWOaFwarh11PTtogBw1imIfdCLazuHh8F057kR2Rx_HJLEPMrRhNUM
ReplyDelete