பிரான்சில் இளைஞர்களால் மீண்டும் கோரத் தாண்டவத்திற்கு தயாராகும் கொரோனா
பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பிரான்சின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். இம்முறை வயதானவர்களை விட இளைஞர்களே அதிகம் தொற்றுக்குள்ளாவதாக அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக 15 வயது முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களே இதில் அதிகம் தொற்றுக்குள்ளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணம் மாலை நேரங்களிலும் இரவு வேளைகளிலும் கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களிலும் அதிகமாக கலந்து கொள்ளும் அவர்கள் எந்த விதமான கொரோனா தடுப்பு முறைகளையும் பின்பற்றுவதில்லை எனவும், கொரோனாவிற்கு முன்பு இயல்பு நிலையில் எவ்வாறு கோடை விடுமுறையை அனுபவித்தார்களோ அவ்வாரே தற்போதும் நடந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார்
இதே வேளை பிரான்சின் பிரதமர் ஜோன் கஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இனி பிரான்சின் முற்று முழுதான முடக்கத்திற்கு சாத்தியமில்லை எனவும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகள் மட்டும் சில வேளை முடக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார் .
Comments
Post a Comment