ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்
ஐரோப்பிய நாடான போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆந்தரேஷ் டோடோவை (Andrzej Duda)ஐநா பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவிப்பது போல் போலியாக ரஷ்ய நாட்டவர் ஒருவர் ஏமாற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்தில் அண்மையில் நடந்த தேர்தலில் வென்று டோடோ மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டடார். தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டெரஸ் (Antonio Guterres)தொலைபேசியில் அழைத்து உள்ளார் .அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்த அவர் பல்வேறு சர்வதேச விடயங்கள் குறித்து கேள்விகளை கேட்டுள்ளார். குறிப்பாக ரஷ்யா உடனான உறவு ,ரஷ்யாவை எதிர்த்து உக்கிரைனுக்கு ஆதரவு அளிப்பது என அவர் கேள்வி கேட்டுள்ளார். இந்த கேள்விகளால் அதிர்ச்சி அடைந்தாலும் ஐநா பொதுச் செயலாளர் கேட்கிறார் என்ற காரணத்தால் அவர் தனது கருத்தை கூறியுள்ளார் . பின்னர் ரஷ்யாவைச் சேர்ந்த விளாடிமமமிர் குஸ்நெட்சோவ் என்ற நபர் தான் போலந்து அதிபருடன் பேசிய உரையாடலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் .தான் ஐநா பொதுச் செயலாளர் போன...
Comments
Post a Comment