பிரான்சில் முகக்கவசங்களை மக்களுக்கு இலவாசமாக வழங்கு மாறு கோரி பாராளுமன்றில் மனு
பிரான்ஸ் நாட்டைப் பொறுத்த வரை கொரோனாவின் இரண்டாவது அலை வெகு விரைவாக உருவாகலாம் என்ற அச்சம் சுகாதாரத் துறையினால் எச்சரிக்கையாக விடுக்கப்பட்டடுள்ளது.
நிலையில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் இடது சாரி மற்றும் தீவிர இடாது சாரிக்கட்சிகள் "முகக்கவசங்கள் இலவசமாக்கப்பட வேண்டும்" என்ற கோராக்கையை பாராளுமறில் முன் வைத்துள்ளன.
குறிப்பாக ஜூலை 20ம் திகதி முதல் மூடப்பட்ட இடங்களில் முகக்கவசங்கள் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக இவை சாதாரண மக்களுக்கு பெரும் சுமையாகவே அமைந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக பிரான்சில் முகக்கவசங்களை விற்பனை செய்தமையின் மூலம் 175 மில்லியன் யூரோக்களையும் தொற்று நீக்கிகளை விற்பனை செய்தமையின் மூலம் 78 மில்லியன் யூரோக்களையும் வருமானமாக பெரிய அங்காடிகள் பெற்றுள்ளன.
ஆரம்பத்தில் 50 முகக்கவசங்கள் கொண்ட(சாதாரண) ஒரு பெட்டி 35 யூரோக்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டிருந்தது.எனினும் இவை தற்போது விலை குறைக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் பிரான்சில் தற்போது தேவையான அளவில் முகக்கவசங்கள் இருப்பில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது .
Comments
Post a Comment