கொரோனா வைரசிற்கு எதிரா யுத்தத்தில் அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தடுப்பூசி



அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னா செவ்வாயன்று அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது

அமெரிக்க நிறுவனமான மாடர்னா தனது கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் 3 ஆம் கட்டத்தின் தொடக்கத்தை அறிவித்துள்ளது.


 மாடர்னா தனது தடுப்பூசியை இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்தைக்கு கொண்டு வர உத்தேசித்துள்ளது. அதனால் அதிகளவான தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்யமுடியும் என  நம்புகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க இருநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் குழுக்கள் தற்போது கடுமையாக உழைத்து வருகின்றன. இருபது தடுப்பூசி வகைகள் தற்போது  ஒரு மேம்பட்ட கட்டத்தில் இருக்கும் இந்த வெறித்தனமான சர்வதேச பந்தயத்தில், மாடர்னா பயோடெக்கும் களத்தில் இறங்கியுள்ளது. 


அமெரிக்கர்கள் தங்களது தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் 3 ஆம் கட்டத்தை தொடங்குவதாக அறிவிப்பதன் மூலம் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கையான செய்தி ஒன்றை தெரிவிக்கின்றார்கள். 

இது மனிதர்களுக்கு பரிசோதிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாகவும் காணப்படுகிறது .

பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தெரபியூடிக்ஸ் மே மாதத்தில் கோவிட் -19 க்கு எதிராக முதன்முதலில் தடுப்பூசியினை பரிசோதித்தது. 

  செவ்வாயன்று, அமெரிக்க நிறுவனம் தனது மருத்துவ பரிசோதனையின் 3 ஆம் கட்டத்தில் ஜூலை 27 அன்று நுழைவதாக அறிவித்தது,

 அமெரிக்காவில் 30,000 மக்கள் மீது அதன் தடுப்பூசியினை பரிசோதிக்க இருக்கின்றது .

 அமெரிக்க  அரசாங்கத்தால் இணைந்து நிதியளிக்கப்பட்ட இப் பரிசோதனைகளின் முதல் கட்டம் நம்பிக்கைக்குரிய முடிவுகளைத் தந்ததைத் தொடர்ந்து  அதன் இறுதி படியினை பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுடன் இணைந்ததே பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்