பிரான்சில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் பாரதூமானதாக இருக்கும் என எச்சரிக்கை
பிரான்சில் தற்போது கோடை விடுமுறையில் மக்கள் கடற்கரையோரங்களை நோக்கி படையெடுப்பதாலும் சுற்றுலாதலங்களுக்கு செல்வதாலும் கொரோனா மிக வேகமாக பரவிவருவாதாக எச்சரிக்கை ஒன்றை பிரான்சின் சுகாதாரத் துறை விடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட முதலாவது அலையினை விட இது பாரதூரமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் பிரான்சின் பெரிய நிறுவனங்களை சுமார் 10 வாரங்களுக்கு தேவையான முகக்கவசங்கள், தொற்றுநீக்கி போன்றவற்றை கையிருப்பில் வைத்திருக்குமாறு வலியுறுத்தி உள்ளது.
தற்போது பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமேடுப்பதால் பிரான்சில் குளிர் காலத்தில் இதன் தாக்கம் மிகவும் பாரதூரமாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பாரிசும் அதன் புற நகர் பகுதிகளிலும் மக்கள் இயல்பு நிலையில் இருப்பதைப் போன்றே நடந்கொள்கின்றார்கள் எந்தவித சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் நடந்தது கொள்கின்றார்கள். இதே வேளை இனி பூரண முடக்கம் இல்லை என பிரான்ஸ் அரசு குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment