நெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா



டர்பன்: தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

இந்த தகவலை அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன. தற்போது ஜிண்ட்ஸி டென்மார்க்கில் தூதராக பதவியில் இருந்தார்.

ஜிண்ட்ஸி மண்டேலா திங்கள்கிழமை அதிகாலை ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் இறந்ததாக அந்த நாட்டு தொலைக்காட்சியான, தென்னாப்பிரிக்க ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
2015 முதல் டென்மார்க்கிற்கான தென்னாப்பிரிக்காவின் தூதராக இருந்தார் ஜிண்ட்ஸி மண்டேலா.
1985 ஆம் ஆண்டு முதல் மண்டேலாவின் மகள் சர்வதேச முக்கியத்துவம் பெற்றார். ஏனெனில் அப்போதுதான், வெள்ளை சிறுபான்மை அரசாங்கம் நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்க முன்வந்தது. ​​ஆனால் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டது. எனவே மண்டேலா விடுதலையாக சம்மதம் தெரிவிக்கவில்லை. தனது தந்தையின் இந்த முடிவை ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டியவர் ஜிண்ட்ஸி.

ஜிண்ட்ஸி, மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. 2013ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி, நெல்சன் மண்டேலா காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பதில் உலக நாடுகள் (சிறப்புக்கட்டுரை தமிழ்மொழி பெயர்ப்பு )