இலங்கையில் கல்வி அமைச்சின் சுற்றுநிருப வழிகாட்டலின் படி நடக்காத கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு


.
கல்வி அமைச்சின் சுற்றுநிருப வழிகாட்டலின் படி நடக்காத கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. 
கல்வி நிர்வாகிகளின் தான்தோன்றித்தனமாக செயற்பாடுகளால் பாடசாலைகள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன.

தற்போதைய கோவிட்19 பரவல் தொடர்பாக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கல்வி அமைச்சின் தெளிவான சுற்று நிருபம் காணப்பட்ட போதிலும் பல கல்வி நிர்வாக அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதன் விளைவாக நிலமை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ராஜாங்கன யாய 1 ஐச் சேர்ந்த மாணவன் கற்கும் பாடசாலை அதிபர், அனைத்து வகுப்பு மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அழைத்திருந்ததாகவும் இதன் காரணமாக நிலமை தீவிரமடைந்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 
அவ்வாறே, பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்கள் மாத்திரமே வரவழைக்கப்பட வேண்டும் என்று மிகத் தெளிவான அறிவுறுத்தலை கல்வி அமைச்சு விடுத்திருந்த போதிலும், கோனபீனுவல சாராலங்கார வித்தியாலயத்தின் அதிபர் தேவையற்ற விதத்தில் பாடசாலைக்கு ஆசிரியர்களை அழைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்வாறே கம்பஹ கல்வி வலயத்தின் பணிப்பாளர், கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலை புறக்கணித்து அனைத்து ஆசிரியர்களையும் பாடசாலை வருமாறு அழைத்திருந்தார். 

கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவித்தலுக்கு ஏற்ப, பாடசாலைக்கு வருகை தராத கொழும்பு வலய ஆசிரியர் ஒருவருக்கு கடமையை விட்டுச் சென்றதாகக் கருதப்படும் என வலயத்தின் பணிப்பாளர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். 

வெலிமட, ஹம்பாந்தோட்டை, ஹோமாகம, ஜயவர்தனபுர, பிலியந்தல, மாத்தளை, வத்தேகம, தெனுவர, மஹியங்கன, கண்டி உட்பட பல வலயங்களின் ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்கு வருகை தருமாறு கல்வி நிர்வாகிகள் வற்புறுத்தி இருந்தனர். 

இது கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாது கட்டுப்பாட்டை இழந்த நிலையை விளக்குகிறதா என ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கோவிட்19 அச்சுறுத்தல் மீள எழுந்துள்ள இச்சூழலில் பாடசாலைகளின் அதிபர்களினதும் சில நிர்வாகிகளினதும் செயற்பாடுகள் காரணமாக இந்நிலமை தீவிரமடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியள்ளது.

Comments

Popular posts from this blog

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுடன் இணைந்ததே பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்