OFII மூலமாக குடும்பத்தினை வரவழைத்து கொள்ள(Regroupement de familiale)
பிரான்ஸ் நாட்டில் புகலிட தஞ்சம் கோரி OFPRA அல்லது CNDA மூலமாக அகதி(refugié)அந்தஸ்து பெற்றவர்களும் அத்துடன் வேலை செய்யும் வீசா(immigration) பெற்றவர்களும் நாட்டில் இருக்கும் தங்களுடைய குடும்பத்தை பிரான்சுக்கு வரவழைப்பதற்கு OFII மூலம் விண்ணப்பிப்பவர்கள் அறிந்திருக்கவேண்டிய விபரங்கள்
#விண்ணப்பிப்பவர்கள் 18 மாதங்களுக்கு மேலதிகமாக இங்கு வசித்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
#அவர்களிடம் உள்ள வதிவிட அட்டை (récépissé,carte de séjour) குறைந்தது ஒரு வருடத்திற்கு செல்லுபடியானதாக(valable) இருக்க வேண்டும் .
# அவர்களின் வருமானம் சம்பளம் மூலமாகவோ ,சொந்த தொழில் மூலமாகவோ, வீட்டு வாடகை மூலமாகவோ அல்லது ஓய்வூதியம் மூலமாகவோ இருக்க வேண்டும் .
#கணவன் ,மனைவி(02 பேர்) அல்லது கணவன் ,மனைவியுடன் ஒரு குழந்தை (03 பேர் ) எனில் அவர் பெறும் SMIC சம்பளம் ஆகக்குறைந்த Net வருமானம் 1219 யூரோவாக இருக்க வேண்டும் .
# 04 அல்லது 05 பேர் எனில் SMIC 1322 யூரோ Net வருமானம் பெறுபவராகவும் இருத்தல் வேண்டும்.
#06 பேருக்கு மேல் எனில் SMIC Net சம்பளம் 1442.50 யூராவிற்கு குறையாததாகவும் இருத்தல் வேண்டும் .
#மிக முக்கியமாக இவ் வருமானங்கள் CAF மூலம் பெறப்படுகின்ற RSA அல்லது ASPA எனப்படும் வயோதிபருக்கு கொடுக்கப்படும் சலுகைத்தொகை மற்றும் ASS போன்ற பண வருவாய்களாக இருத்தல் கூடாது .
# மாற்றுத்திறனாளியாகவோ அல்லது 65வயதிற்கு மேற்பட்டவராகவோ இருந்தால் இந்த வருமான நடைமுறை விலக்களிக்கப்படுகின்றது.
#அத்துடன் 65 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் அவர் 25 வருடங்களுக்கு மேல் இங்கு வாழ்ந்து இருப்பது அவசியமாகும் .
*[இது தொடர்பான மேலதிகமான விபரங்களை தெளிவாகப்பெற்றுக்கொள்ள
*நிஷா ☎️ 0760268089*
(அகரம் மொழி பெயர்ப்பு சேவை- பிரான்ஸ்)]
Comments
Post a Comment