பிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா ஒருநாளில் 2524 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.
பிரான்சில்
கொரோனா தொற்று வேகம் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் (புதன்கிழமை) பிரான்சில் 2,524 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சராசரியாக 2.2% வீதத்தாக் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 எனும் எண்ணிக்கையில் உள்ளது.
தற்போது மருத்துவமனையில் 4,981 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணிநேரத்தில் 143 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
379 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 30,371 பேர் மற்றும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17 பேர் மரணமடைந்துள்ளனர்.
இன்நிலை தொடருமானால் இது பாரதூரமான விளைவை பிரான்சில் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை
Comments
Post a Comment