பிரான்சில் மின்சாரம் மற்றும் எரிவாயு என்பன இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு



ஜூலை 10 ம் தேதி எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (CRE) முன்மொழிந்தபடி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி மின்சாரத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சார கட்டணங்கள் தனிநபர்களுக்கு 1.54% மற்றும் தொழில் நிறூவனங்களுக்கு 1.58% என மதிப்பிடப்பட்டுள்ளது

. இந்த விலை அதிகரிப்பு " பொது மின்சாரம் மற்றும் விநியோக வலையமைப்புகளின் விலைகளில் ஆண்டு மாற்றத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது " என CRE அதன் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இது போன்றே எரிவாயுவுடன் சமைக்கும் குடும்பங்களுக்கு ஆகஸ்டில் தங்கள் பில்கள் 0.3% அதிகரிக்கும். இரட்டை பயன்பாட்டு சமையல் மற்றும் சூடான நீரைக் கொண்டவர்களுக்கு, விலைகள் 0.7% அதிகரிக்கும். இறுதியாக, எரிவாயுவைக் கொண்டு வெப்பப்படுத்தும் வீடுகளின் விலை 1.4% அதிகரிக்கும். 

இன் நிலை படிப்படியாக   பிப்ரவரி 2021 வரை எரிவாயுவின் விலையில் சீராக அதிகரிப்பை ஏற்படுத்தும் , அதன்படி மொத்தம் + 6% அதிகரிப்புக்கு அது வழிவகுக்கும்


Comments

Popular posts from this blog

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுடன் இணைந்ததே பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்