பிரான்சில் மீண்டும் உச்சத்தை தொட்டது கொரோனா ஒரேநாளில் 4586 பேருக்கு கொரோனா

பிரான்ஸில் படிப்படியாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று  உச்சக்கட்டத்தை மீண்டும் அடைந்துள்ளது.  அதன்படி 
கடந்த 24 மணிநேரத்தில் 4,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது இது கடந்த மே மாதத்திற்கு  பின்னர் ஏற்பட்ட பாரிய  அதிகரிப்பாகும் அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி   , 30,503ஆக உயர்ந்துள்ளது உயிரிழப்பு!

பிரான்சில், COVID-19 தொற்றுநோய் குறித்து சுகாதார அதிகாரிகள் வழங்கிய சமீபத்திய அறிக்கை...

21/08/2020  நிலவரப்படி கடந்த  24 மணிநேரத்தில் பிரான்சில் 4,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரான்சில் 234,400 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 23 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் பதிவான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,503 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 38 புதிய கொரோனா தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மொத்தமாக 304 வலையங்கள் தற்போது  கொரோனா தொற்று வலயங்களாக பின் தொடரப்பட்டு வருகின்றன. 

தற்போது மொத்தம் 4,745 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் 379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுடன் இணைந்ததே பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்