லெபனான் தலைநகர் குண்டு வெடிப்பின் காரணம் வெளியாகியது
நேற்று செவ்வாய்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 78 பேர் உயிரிழந்ததுடன், 4000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
.இதற்கிடையில், வெல்டிங் செய்யும் ஒருவரே இந்த வெடி விபத்தைத் துவக்கியதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் ஒருவர் வெல்டிங் செய்துகொண்டிருந்ததில் ஏற்பட்ட தீப்பொறியே ரசாயனப்பொருட்கள் தீப்பிடிக்கக் காரணம் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளதாக MailOnline பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 2,750 டன் வெடிக்கக்கூடிய ரசாயனம், துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் 2014ஆம் ஆண்டு முதல் சேமிக்கப்பட்டு வந்ததாக லெபனானின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த ரசாயனம் அம்மோனியம் நைட்ரேட் என அவர் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெடிகுண்டு நிபுணர் ஒருவர், அது முழுவதும் அம்மோனியம் நைட்ரேட்டாக இருக்க வாய்ப்பில்லை, வேறு ஏதாவது வெடிப்பொருட்களாகக் கூட இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அந்த வெடிவிபத்து, 3 கிலோ டன் TNT என்னும் வெடிப்பொருள் வெடித்தால் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதாவது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட Little Boy என்னும் வெடிகுண்டின் அளவில் ஐந்தில் ஒரு பங்குடைய குண்டு வீசப்பட்டால் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அளவுக்கு பயங்கரமாக வெடித்துள்ளது.
Comments
Post a Comment