தமிழ் தலைமைகளை மக்கள் புறக்கணித்தமைக்கு யார் காரணம்?
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தவறிய தமிழ் தலைமைகள் மக்களால் புறக்கணிக்கப்பட்டனர். இது யதார்த்தமான ஒன்று. வெறுமனே பொய்த் தேசியம் வெளியே பேசிக்கொண்டு உள்ளே குள்ள நரிபோல் அரசாங்கத்தின் உதவிகளையும் பெற்றுக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு பல வழிகளிலும் முட்டுக்கொடுத்தமையை தோல்விக்கான காரணம் என சொன்னாலும் தாங்கள் தான் தமிழ் தலமை என இவார்கள் மார்தட்னாலும் அப்பட்டமாக இவர்கள் செய்த ஓரிரு பிழைகளை இவ்விடத்தில் முன் வைக்கலாம் என கருதுகின்றேன்,
#காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகள் கதறிக் கண்ணீர் வடிக்கும் போது அதனைக் கண்டு கொள்ளாமல் இவர்கள் கடந்து சென்றதோ மக்கள் இவர்களை தோற்கடிக்க காரணம்
#தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்ட போதும் சுமந்திரன் முதலானோர் அதனை வெளிப்படையாகவே மறுத்து வந்ததும் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்து வந்ததாகவும் இருக்குமோ?
#பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முயற்சி செய்யாமல் இருந்ததாக இருக்குமோ?
#கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் சம்மந்தரைப் பொறுத்தமட்டில் (எதிர் கட்சி தலைவராக இருந்த போது) ஒரு சிறிய விடயம் அதைக்கூட செய்ய முடியாமல் போனதாக இருக்குமோ?
#இவை எல்லாவற்றையும் விட தமது குடும்பத்திற்காக பாடுபட்டு சொத்து சேர்த்ததாக இருக்குமோ?
இவ்வாறு இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
Comments
Post a Comment