Posts

Showing posts from August, 2020

ஐரோப்பிய சம்பியன்ஸ் பிரான்சை வீழ்த்தி ஜேர்மனி வென்றது, ஆறாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றிய Bayern Munich!

Image
கோப்பையை வென்ற பேயர்ன் முனிச்   (Bayern Munich) ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பி.எஸ்.ஜி.(St.-Germain)  அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி பேயன் முனிச்  (Bayern Munich) அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் போர்ச்சுகலில் நடைபெற்றது. இந்த போட்டியின் பேயர்ன் முனிச்  (Bayern Munich) (ஜெர்மனி) மற்றும் பி.எஸ்.ஜி. பாரீஸ் (St.-Germain-Paris) செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அரைஇறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இதையடுத்து போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பேயர்ன் முனிச்  (Bayern Munich) அணியை எதிர்த்து முதல்முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்த பி.எஸ்.ஜி.  (St.-Germain-Paris) அணி களமிறங்கியிருந்தது. போர்ச்சுகல் நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இரு அணிகளுக்கும் கோல் அடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றை

பிரான்சில் மீண்டும் உச்சத்தை தொட்டது கொரோனா ஒரேநாளில் 4586 பேருக்கு கொரோனா

Image
பிரான்ஸில் படிப்படியாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று  உச்சக்கட்டத்தை மீண்டும் அடைந்துள்ளது.  அதன்படி  கடந்த 24 மணிநேரத்தில் 4,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது இது கடந்த மே மாதத்திற்கு  பின்னர் ஏற்பட்ட பாரிய  அதிகரிப்பாகும் அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி   , 30,503ஆக உயர்ந்துள்ளது உயிரிழப்பு! பிரான்சில், COVID-19 தொற்றுநோய் குறித்து சுகாதார அதிகாரிகள் வழங்கிய சமீபத்திய அறிக்கை... 21/08/2020  நிலவரப்படி கடந்த  24 மணிநேரத்தில் பிரான்சில் 4,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரான்சில் 234,400 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 23 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் பதிவான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,503 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 38 புதிய கொரோனா தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மொத்தமாக 304 வலையங்கள் தற்போது  கொரோனா தொற்று வலயங்களாக பின் தொடரப்பட்டு வருகின்றன.  தற்போது மொத்தம் 4,745 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர ச

பிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா ஒருநாளில் 2524 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

Image
பிரான்சில்  கொரோனா தொற்று வேகம் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் (புதன்கிழமை) பிரான்சில் 2,524 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   சராசரியாக 2.2% வீதத்தாக் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 எனும் எண்ணிக்கையில் உள்ளது.  தற்போது மருத்துவமனையில் 4,981 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  24 மணிநேரத்தில்  143 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். 379 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதேவேளை, பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 30,371 பேர் மற்றும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17 பேர் மரணமடைந்துள்ளனர். இன்நிலை தொடருமானால் இது பாரதூரமான விளைவை பிரான்சில் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை 

தமிழ் தலைமைகளை மக்கள் புறக்கணித்தமைக்கு யார் காரணம்?

Image
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தவறிய தமிழ் தலைமைகள் மக்களால் புறக்கணிக்கப்பட்டனர். இது யதார்த்தமான ஒன்று. வெறுமனே பொய்த் தேசியம் வெளியே பேசிக்கொண்டு உள்ளே குள்ள நரிபோல் அரசாங்கத்தின் உதவிகளையும் பெற்றுக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு பல வழிகளிலும் முட்டுக்கொடுத்தமையை தோல்விக்கான காரணம் என சொன்னாலும் தாங்கள் தான் தமிழ் தலமை என இவார்கள் மார்தட்னாலும் அப்பட்டமாக இவர்கள் செய்த ஓரிரு பிழைகளை இவ்விடத்தில் முன் வைக்கலாம் என கருதுகின்றேன், #காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகள் கதறிக் கண்ணீர் வடிக்கும் போது அதனைக் கண்டு கொள்ளாமல் இவர்கள் கடந்து சென்றதோ மக்கள் இவர்களை தோற்கடிக்க காரணம் #தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்ட போதும் சுமந்திரன் முதலானோர் அதனை வெளிப்படையாகவே மறுத்து வந்ததும் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்து வந்ததாகவும் இருக்குமோ? #பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முயற்சி செய்யாமல் இருந்ததாக இருக்குமோ? #கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் சம்மந்தரைப் பொறுத்தம

இருநூற்றைம்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் மீண்டும் ஐரோப்பாவில் வரலாறு காணாத வரட்சி

Image
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு கோடைகாலங்களில் ஐரோப்பாவைத் தாக்கிய சாதனை படைத்த  வறட்சி  , இந்த ஆண்டும் அதன் கோரத்தாண்டவத்தினை ஆரம்பித்திருக்கின்றது,  இந் நிகழ்வானது இந்த நூற்றாண்டின் இறுதியில்,  புவி வெப்பமடைதல்  காரணமாக அடிக்கடி நிகழக்கூடும் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில்"அறிவியல் அறிக்கைகள்" என்ற ஆய்வில்எச்சரிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், 1766 ஆம் ஆண்டின் தரவுகளைப் பயன்படுத்தும் ஆய்வின் படி, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் வறட்சி ஏற்கனவே "250 ஆண்டுகளாக முன்னோடியில்லாத வகையில் இருந்தது, மேலும் தாவர வளர்ச்சியில் அவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம் 2003 வறட்சியை விட அதிகமாக உள்ளது". 2003 ஆம் ஆண்டில், ஐரோப்பா ஏற்கனவே ஒரு விதிவிலக்கான வெப்ப அலை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. 1949-1950 இன் தொடர்ச்சியான வறட்சிகள் இரண்டாவது இடத்தில் உள்ளன, ஆனால் பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் சிறியதாக இருந்தது. அதிகரித்துவரும் வறட்சி காலநிலை மாற்றத்தின் விளைவுகள் காரணமாக, பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக்

லெபனான் தலைநகர் குண்டு வெடிப்பின் காரணம் வெளியாகியது

Image
நேற்று செவ்வாய்கிழமை   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 78 பேர் உயிரிழந்ததுடன், 4000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இதற்கிடையில், வெல்டிங் செய்யும் ஒருவரே இந்த வெடி விபத்தைத் துவக்கியதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ஒருவர் வெல்டிங் செய்துகொண்டிருந்ததில் ஏற்பட்ட தீப்பொறியே ரசாயனப்பொருட்கள் தீப்பிடிக்கக் காரணம் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளதாக MailOnline பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 2,750 டன் வெடிக்கக்கூடிய ரசாயனம், துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் 2014ஆம் ஆண்டு முதல் சேமிக்கப்பட்டு வந்ததாக லெபனானின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த ரசாயனம் அம்மோனியம் நைட்ரேட் என அவர் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெடிகுண்டு நிபுணர் ஒருவர், அது முழுவதும் அம்மோனியம் நைட்ரேட்டாக இருக்க வாய்ப்பில்லை, வேறு ஏதாவது வெடிப்பொருட்களாகக் கூட இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார். அந்த வெடிவிபத்து, 3 கிலோ டன் TNT என்னும் வெடிப்பொருள் வெடித்தால் என்ன தாக்க

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

Image
வாயதானவர்களைப் பராமரிக்கும் வீட்டு உதவியாளர்களுக்கு கோவிட் போனஸ் கொடுப்பனவாக  ஒரு ஊழியருக்கு 1,000 யூரோக்கள் வரை ஆண்டொன்றுக்கு வழங்குவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவர்கள் நேற்று செவ்வாய் கிழமை அறிவித்தார்,   320,000 க்கும் அதிகமான தொழிளாளர்கள் .இத் திட்டத்தின்  மூலம் ஆண்டு தோறும் பயனடைவார்கள்.  இதற்காக  160 மில்லியன் யூரோக்கள் விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார் . இவ் வருடத்திற்கான  போனஸ் ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார் .   ஒரு முழுநேர ஊழியர் ஆண்டு இறுதிக்குள் 1,000 யூரோ வரை போனஸ் பெறலாம்.  இது 1.1 மில்லியன் வயதானவர்களையும் குறைபாடுகள் உள்ளவர்களையும் கவனித்துக்கொள்ளும் 320,000 ஊழியர்கள்  இதனால் பயனடைவர்.

லெபனான் பெய்ரூட்டில் இரண்டு பாரிய வெடிப்புகள்: புதன்கிழமை தேசிய துக்க நாளாக அரசாங்கம் அறிவிப்பு சமீபத்திய அறிக்கையின்படி 73 பேர் இறந்தனர் மற்றும் 3,700 பேர் காயமடைந்தனர்

Image
லெபனான் செவ்வாயன்று இரண்டு வலுவான  வெடிப்புகள்  லெபனான் தலைநகர்  பெய்ரூட்டை  உலுக்கியது, இது  துறைமுகப் பகுதியில் நடந்த பலத்த குண்டுவெடிப்பாகும் ,இதன் சத்தம் நகரின் பல பகுதிகளில் கேட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்புகளின்  காரணம் இப்போதைக்கு தெரியவில்லை.தற்போது வரை 73 பேர் இறந்தனர் மற்றும் 3,700 பேர் காயமடைந்தனர் என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. "இது வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் ஒரு பேரழிவு" என்று தலைநகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றபோது பல தொலைக்காட்சிகளால் பேட்டி கண்ட சுகாதார அமைச்சர் ஹமத் ஹசன் தெரிவித்தார். "தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளன," என்று அவர் கூறினார், மற்ற காயமடைந்தவர்களை புறநகர்ப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு கொண்டு செல்லுமாறு அழைப்பு விடுத்தார். லெபனான்  செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான ஜார்ஜஸ் கெட்டானே, லெபனான் தொலைக்காட்சி எல்.பி.சி.யில் ஒரு அறிக்கையில் "நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்கள்" பற்றி பேசினார். "தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது என அவர் தெரிவ

பிரான்சில் மின்சாரம் மற்றும் எரிவாயு என்பன இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு

Image
ஜூலை 10 ம் தேதி எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (CRE) முன்மொழிந்தபடி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி மின்சாரத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சார கட்டணங்கள் தனிநபர்களுக்கு 1.54% மற்றும் தொழில் நிறூவனங்களுக்கு 1.58% என மதிப்பிடப்பட்டுள்ளது . இந்த விலை அதிகரிப்பு "  பொது மின்சாரம் மற்றும் விநியோக வலையமைப்புகளின் விலைகளில் ஆண்டு மாற்றத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது  " என CRE அதன் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. இது போன்றே  எரிவாயுவுடன்  சமைக்கும் குடும்பங்களுக்கு ஆகஸ்டில் தங்கள் பில்கள் 0.3% அதிகரிக்கும். இரட்டை பயன்பாட்டு சமையல் மற்றும் சூடான நீரைக் கொண்டவர்களுக்கு, விலைகள் 0.7% அதிகரிக்கும். இறுதியாக, எரிவாயுவைக் கொண்டு வெப்பப்படுத்தும் வீடுகளின் விலை 1.4% அதிகரிக்கும்.  இன் நிலை படிப்படியாக   பிப்ரவரி 2021 வரை எரிவாயுவின் விலையில் சீராக அதிகரிப்பை ஏற்படுத்தும் , அதன்படி மொத்தம் + 6% அதிகரிப்புக்கு அது வழிவகுக்கும்